குமரி மாவட்டம் வள்ளியூரில், தங்க லட்சுமி (70) என்ற மூதாட்டியிடம் மருத்துவமனை ஊழியர் போல் நடித்து ஒருவர் ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனைப் பார்க்க வந்த தங்க லட்சுமியிடம், அடையாள அட்டை கிடைத்தால் சிகிச்சைக்கான பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி அந்த நபர் நகையைக் கழற்றி வாங்கியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.














