கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வட்டக்கோட்டை பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ. 14.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், நேற்று (6-ம் தேதி) குழந்தைகள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்பு இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.














