கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட செல்லங்கோணம் பகுதியில் 10 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை அகற்ற மதுரை ஹைகோர்ட் உத்தரவின்படி பேரூராட்சி தலைவர் சிவராஜ், செயல் அலுவலர் சத்யதாஸ் முன்னிலையில் பணி நடைபெற்றது. அப்போது, குளச்சல் கடலோர பாதுகாப்பு படையில் போலீசாக பணியாற்றும் ஆல்பர்ட் அன்புராஜ் என்பவர் பேரூராட்சி தலைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














