திங்கள்சந்தையில் காமராஜ் பஸ் நிலையம் அருகே, கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து, திங்கள்நகர் பாரதிய ஜனதா பேரூராட்சி கவுன்சிலர் ஜெயசேகரன் தலைமையில், பழுதடைந்த சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














