பிரம்மபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ராவுக்கும் (33) ரமேஷ் என்பவருக்கும் இடையிலான கள்ளத்தொடர்பே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, பவித்ரா மற்றும் அவரது தாயார் முத்துலெட்சுமி (57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் கேரள மாநிலம் பம்பையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.














