அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

0
17

 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கலாச்சார அடையாளமாக அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கப்பட உள்ளது.

கலை மற்றும் கலாச்சாரத்தில் உறவுகளை வலுப்படுத்துதல், மாணவர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு வரலாற்றை முன்னிலைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படும். மேலும், இது யோகா பயிற்சி மையமாகவும் செயல்பட உள்ளது. மேலும், உலகளவில் பிரபலமான யோகாவை வளைகுடா நாடு ஒரு போட்டி விளையாட்டாகவும் அறிவிக்க உள்ளது.

பல அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்தியக் குழுவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகளும் அபுதாபியில் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here