தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பைஜெயந்த் பாண்டா இன்று ஆலோசனை: என்டிஏ கூட்டணியை வலுப்படுத்த தீவிரம்

0
19

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்ள நிலை​யில், கட்​சிப் பணி​களில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரு​கின்​றன. திமுக கூட்​ட​ணி​யில் தற்​போது வரை எந்த மாற்​ற​மும் இல்​லாமல் அதே கூட்​டணி தொடர்ந்து வரும் நிலை​யில், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் அதி​முக மட்​டுமே இணைந்​துள்​ளது. பாமக, தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் கூட்​ட​ணியை உறுதி செய்​யாமல், தயக்​கம் காட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து தொகு​தி​களுக்​கும் பாஜக சார்​பில் தேர்​தல் பொறுப்​பாளர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே​போல், தமிழகத்​துக்​கான தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக தேசிய துணை தலை​வர் பைஜெயந்த் பாண்டா நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

தேர்​தல் பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​ட​தில் இருந்து தமிழகத்​துக்கு பலமுறை வருகை தந்து மூத்த நிர்​வாகி​களுக்கு பல்​வேறு ஆலோ​சனை​களை வழங்​கி​னார். இந்​நிலை​யில், நேற்று மாலை மீண்​டும் சென்னை வந்த பைஜெயந்த் பாண்​டா, பாஜக நிர்​வாகி​களு​டன் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார்.

சென்னை ராயப்​பேட்டை ஒய்​எம்​சிஏ அரங்​கில் காலை 10 மணிக்கு நடை​பெறும் இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழகம் முழு​வதும் உள்ள சட்​டப்​பேரவை தொகுதி அமைப்​பாளர்​கள், இணை அமைப்​பாளர்​கள் பங்​கேற்க இருக்​கின்​றனர்.

இக்கூட்டத்தில், தேர்​தல் பிரச்​சார வியூ​கம், பொதுக்​கூட்​டங்​கள் நடத்​துதல் குறித்​தும், தமிழகத்​தில் நடை​பெற உள்ள வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்த பணி​கள் குறித்​தும் பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை வழங்க இருக்​கிறார். மேலும், சென்​னை​யில் இரண்டு நாட்​கள் தங்​கி​யிருந்​து, பாஜக கூட்​ட​ணியை வலுப்​படுத்த, பாமக, தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகளு​டன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here