நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தளவாடப் பொருட்கள் கணக்கீட்டின் போது இந்த திருட்டு தெரியவந்துள்ளது.














