இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கோபாலகிருஷ்ணன் கைத்தடியால் ராஜனை தாக்கியதில் ராஜன் உயிரிழந்தார். கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் ராஜன் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.














