கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் வழியாக கனிமங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேற்று தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரை புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி அகற்றப்பட்டது. இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.














