குளச்சல், குருந்தன்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் தொடங்கி வைத்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்தும் விளக்கப்பட்டது.
 
            

