கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் நான்கு வழிச்சாலை பகுதியில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பாறைப்பொடி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் லாரியை பறிமுதல் செய்து, நெல்லை மாவட்டம் கரிசல்பட்டியைச் சேர்ந்த சால்மன் (45) என்ற லாரி டிரைவரை கைது செய்தனர்.
 
            

