ஆற்றூரில் நடந்த மாநில வாள்வீச்சுப் போட்டியில், பயிற்சி மைய உரிமையாளர் செல்வகுமாருக்கும், ஜிஷோ நிதி தலைமையிலான அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் செல்வகுமாருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் திருவட்டாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














