தக்கலை அருகே குழித்தோடு பகுதியில் நேற்று (அக்.28) ஒரு குழந்தையின் கால் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலின் பேரில், தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, நாற்காலியின் அடிப்பகுதியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.














