மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். களியக்காவிளை போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














