குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். இன்று (22-ம் தேதி) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில், மாவட்ட எஸ்பி குழுவினரையும் வெள்ள மீட்பு உபகரணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 அல்லது 7010363173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.