கொல்கத்தாவில் தீபாவளி நாளில் பட்டாசு சத்தம் மற்றும் புகையில் இருந்து தப்பிக்க தெரு நாய் ஒன்று மெட்ரோ ரயிலில் தஞ்சம் புகுந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் தெரு நாய் ஒன்று ப்ளூலைன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதும், அது ஓய்வெடுக்க அமைதியான இடம் தேடி ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதும் தெரிகிறது. எதிர்பாராத இந்தப் பயணியை கண்டதும் ரயில் பயணிகள் வியப்படைவதும் பிறகு தங்கள் செல்போனில் பதிவு செய்வதையும் அதில் காண முடிகிறது.
பட்டாசுகளின் உரத்த சத்தம் மற்றும் புகையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இந்த நாய் மெட்ரோ ரயிலுக்குள் புகுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீடியோ பலரது வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஒரு பயனர், “இதை காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. பயணிகள் யாரும் அந்த நாயை விரட்ட முயற்சிக்கவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.