பாலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆல்வின் வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கருங்கல் போலீசார் பாலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக் கைது செய்தனர். விசாரணையின் போது ஜெயக்குமார் போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடினார். பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து, 15 பவுன் நகையை மீட்டனர். ஜெயக்குமார் நேற்று நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.