ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 40வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ச. சித்ரா, 20 வயதுக்குட்பட்டோருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது தமிழக தடகள வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், 40 ஆண்டுகால ஜூனியர் தடகளப் போட்டி வரலாற்றில் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தமிழகம் வெல்லும் முதல் பதக்கம் என்றும் அவரது பயிற்சியாளர் திலீபன் தெரிவித்தார். தமிழ்நாடு தடகள சங்கத்தினர் அவருக்குப் பரிசுகள் வழங்கினர்.