சென்னையில் இருந்து குருவாயூருக்கு நேற்று இரவு வந்த ரயிலில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ கஞ்சா சிக்கியது. ஒரிசாவைச் சேர்ந்த பிலாசினி (68) மற்றும் சாவித்திரி (55) ஆகியோரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து இந்த சோதனையை நடத்தினர். கஞ்சா கடத்த முயன்ற இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.