நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் அருகே புளியடி மனநல காப்பகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.