ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கடை வைத்திருக்கும் ஸ்டார்வின் சுதர்சன் (47) என்பவர், தனது கடையை இரவு பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 15 கிலோ செம்பு கம்பி, 20 கிலோ பித்தளை மற்றும் ரூ. 1200 மதிப்பிலான பழைய கிழிந்த நோட்டுகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.