தக்கலை அருகே மணலி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.