வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில் பார்வதிபுரம், பறக்கை, புது கிராமம், தேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.