கீழகல்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் (42), நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது மகன் ஆல்ட்ரிக் ப்ரைசன் (7) உடன் டியூஷன் முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கால்வாய் கரை சாலை வழியாக பைக்கில் சென்றபோது, ரமேஷ் கண்ணில் பூச்சி விழுந்ததால் பைக் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்தது. இதில் சிறுவன் ஆல்ட்ரிக் ப்ரைசன் தண்ணீரில் பைக் அடியில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.