நாகர்கோவிலில் பார்வையற்றோர் மற்றும் இயலாதோர் நல அறக்கட்டளை கட்டிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, இன்று மாநகராட்சி கவுன்சிலர் டி. ஆர். செல்வம் தலைமையில் மேயர் மகேஷ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, திமுக செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.