சீனாவைச் சேர்ந்தவர் வீட்டில் சோதனை

0
21

சீன நாட்டை சேர்ந்​தவர் ட்யூ யாங்​கன். விசா நிபந்​தனை​களை மீறியது, போலி ஆவணங்​கள் தயாரித்​தது, நிபந்​தனை​களை மீறி இந்​தி​யா​வில் தங்​கியது தொடர்​பாக 2021-ம் ஆண்டு யாங்​கன் மீது புகார் எழுந்​தது.

இதையடுத்து திருப்​பதி அருகே உள்ள ரேணி​குண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்​தனர். இவ்​வழக்கு திருப்​பதி நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இதனைத் தொடர்ந்​து, அவர், பல பகு​தி​களில் தொழிற்​சாலைகளில் பணி​யாற்​றும் சீன நாட்​டைச் சேர்ந்​தவர்​களுக்​காகவே ரேணி​குண்​டா​வில் ‘பிக் கிச்​சன்’ என்ற சீன ஓட்​டலை நடத்​தி​னார். இதன் மூலம் பல கோடி சம்​பா​தித்​தும் வரி செலுத்​த​வில்லை என தெரிய​வந்​தது.

இதையடுத்​து, சென்​னை, டெல்லி ஆகிய இடங்​களில் இருந்து அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று முன்தினம் திருப்​ப​திக்கு வந்​தனர். பின்​னர் ரேணி​குண்​டா, ஏர்​பேடு ஆகிய இடங்​களி​லும், பிக் கிச்​சன் ஓட்​டல் மற்​றும் அங்கு வரும் வாடிக்​கை​யாளர்​கள் பணி​யாற்​றும் தொழிற்​சாலைகளி​லும் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here