பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ரவீந்திரன், குடும்பத் தகராறு காரணமாக 11 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன் வாழாமல் தனிமையில் வசித்து வந்தார். நேற்று மாலை, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் ரவீந்திரன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரவீந்திரனின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.