நாகர்கோவிலில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்கும் நோக்கத்துடன் சம ஊதிய சட்டத்தை மீறி ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை செயல்படுத்துவதை தடுத்தல், கிராம ஊராட்சிகளில் பகுதிநேர தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.