தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் என்பவர் மகள் கணவனை இழந்து தற்போது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் (45) என்பவர் இளம் பெண்ணுக்கு ஆபாச பாலியல் சம்மந்தமான சைகை காண்பித்துள்ளார். இதை அந்தப் பெண் தந்தையிடம் தெரிவித்தார். ரவீந்திரன் இது குறித்து ராஜேஷிடம் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜேஷ் ரவீந்திரனை தாக்கினார். புகாரின் பேரில் தக்கலை போலீசார் ராஜேஷை கைது செய்தனர். ராஜேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவாகி ரவுடி பட்டியலில் உள்ளார்.