பளுகல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சௌமியா (16) மற்றும் 10ம் வகுப்பு மாணவர் நிகில் (14) ஆகியோர் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வேகமாகச் சென்றதில், பைக் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். நிகில் காரக்கோணம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சௌமியா குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














