இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. அணியில் மிட்​செல் ஸ்டார்க்

0
22

இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள் வரும் 19, 23, 25-ம் தேதி​களில் பெர்த், அடிலெய்​டு, சிட்னி ஆகிய நகரங்​களில் நடை​பெறுகிறது. ஐந்து டி20 போட்​டிகள் அக்​டோபர் 29 (கான்​பெர்​ரா), அக்​டோபர் 31 (மெல்​பர்ன்), நவம்​பர் 2 (ஹோ​பார்ட்), நவம்​பர் 6 (கோல்ட் கோஸ்ட்) மற்​றும் நவம்​பர் 8 (பிரிஸ்​பன்) ஆகிய தேதி​களில் நடை​பெகிறது.

இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்டி தொடர் மற்​றும் டி 20 தொடரின் முதல் 2 ஆட்​டங்​களில் பங்கேற்கும் ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது. கேப்​டன் பாட் கம்​மின்ஸ் முதுகு வலி காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் ஒரு​நாள் போட்​டித் தொடருக்​கும் மிட்​செல் மார்ஷ் கேப்​ட​னாக தொடர்​வார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச டி 20 போட்​டி​யில் இருந்து ஓய்வு பெற்​றுள்ள முன்​னணி நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிக்​கான அணிக்கு மீண்​டும் திரும்பி உள்​ளார்.

ஒரு​நாள் போட்​டிகளில் மிட்​செல் ஸ்டார்க் கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்டு நவம்​பரில் அடிலெய்டு நகரில் பாகிஸ்​தானுக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் விளை​யாடி இருந்​தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை கருத்​தில் கொண்டு பணிச்​சுமையை நிர்​வகிக்​கும் வகை​யில் சமீப​கால​மாக டெஸ்ட் போட்டி​களில் மட்​டுமே மிட்​செல் ஸ்டார்க் விளை​யாடி வந்​தார். கடைசி​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் டெஸ்ட் தொடரில் விளை​யாடி இருந்​தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் மிட்​செல் ஸ்டார்க் பங்​கேற்​க​வில்​லை.

ஒரு​நாள் போட்டி அணி: மிட்​செல் மார்ஷ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், மேத்யூ ரென்​ஷா, மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்​லிஷ், கேமரூன் கிரீன், மிட்​செல் ஓவன், கூப்​பர் கானொலி, ஆடம் ஸம்​பா, மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட், நேதன் எலிஸ், சேவியர் பார்ட்​லெட், பென் டுவார்​ஷு​யிஸ்.

டி 20 அணி (முதல் 2 போட்​டி): மிட்​செல் மார்ஷ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், ஜோஷ் இங்​லிஷ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மார்​கஸ் ஸ்டா​யினிஸ், மிட்​செல் ஓவன், ஆடம் ஸம்​பா,மேத்யூ குனேமன், ஜோஷ் ஹேசில்​வுட், நேதன் எலிஸ், சேவியர் பார்ட்​லெட்​, சீன்​ அபோட்​, பென்​ டு​வார்​ஷுயிஸ்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here