குமரி மாவட்ட ஆதி தமிழர் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குமரி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதி பராமரிப்பு பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தென் மண்டல தலைவர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.