நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த பிரமிளா என்பவரின் ஐந்தரை பவுன் தங்கச் செயினை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பறித்ததாகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சையது அலி (22) மற்றும் மாஹின் (21) ஆகிய இருவர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று குழித்துறை கோர்ட் நீதிபதி இசக்கி மகேஷ்குமார், இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் தலா ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.