தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

0
17

அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு (எல்​சிஓ) உரிமம் வழங்​கு​வதை நிறுத்த வேண்​டும்.

தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் அரசு கேபிள் டிவி செட்​டாப் பாக்​ஸ்​களைத்​தான் பொருத்த வேண்​டுமென்று நிர்ப்​பந்​திப்​ப​தைக் கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு கேபிள் டிவி அலு​வல​கத்தை முற்​றுகை​யிடும் போராட்​டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கம் அறி​வித்​தது.

இதையொட்டி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று சங்​கத்​தினர் ஒன்று கூடி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கினர். சங்​கத்​தின் தலை​வர் சுப.வெள்​ளைச்​சாமி தலைமை தாங்​கி​னார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் சட்​டப்​பேரவை குழுத் தலை​வர் நாகை மாலி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்து பேசுகை​யில், “ஆட்சி மாறி​யும் காட்சி மாறாத நிலை உள்​ளது.

அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தின் போர்​வை​யில் தனி​யார் நிறு​வனம் அத்துமீறுவதை​யும், அதற்கு அதி​காரி​கள் துணை​யாக இருப்​ப​தை​யும் அனு​ம​திக்க முடி​யாது. ஆபரேட்​டர்​களின் கோரிக்​கைகள் தொடர்​பாக முதல்​வரை நேரடி​யாக சந்​தித்​துப் பேச மார்க்​சிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்​கும்” என்று தெரி​வித்​தார்.

இதற்​கிடையே, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அரசு கேபிள் டிவி மேலாண் இயக்​குநர் வைத்​தி​நாதன், தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கத்​தின் தலை​வர் சுப.வெள்​ளைச்​சாமி, பொதுச்​செய​லா​ளர் எஸ்​.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்ட நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதன்​பின் செய்​தி​யாளர்​களிடம் சுப.வெள்​ளைச்​சாமி கூறுகை​யில், “முதல்​வரை சந்​தித்து கோரிக்​கைகளை வலி​யுறுத்த அனு​மதி கோரி 4 மாத​மாக காத்​திருக்​கிறோம். அனு​மதி கிடைக்​காத நிலை​யில் இந்த போராட்​டத்தை முன்​னெடுத்​தோம்.

இயக்​குநருடன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் புதி​தாக ஒளிபரப்பு உரிமம் (எல்​சிஓ) வழங்க மாட்​டோம் என்று உறு​தி​யளித்​துள்​ளார். அக்​.8-ம் தேதி முதல்​வரை சந்​திக்க ஏற்​பாடு செய்​வ​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முக​மும், நாகை மாலி எம்​எல்​ஏ​வும்​ உறு​தி அளித்​துள்​ளனர்​’’ என்​று தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here