ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் கடந்த 3-ந்தேதி உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து ஊர் தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆலங்கோட்டை புதூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகேஷ் (41) என்பவர் உண்டியலை உடைத்து ரூ. 856 திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணத்தை மீட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகேஷ் கன்னியாகுமரி பொற்றையடி அருகே உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.