நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று இரவு இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.