இந்தியா யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா யு-19 அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

0
23

இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 91.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஹாகன் 246 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 92 ரன் கள் சேர்த்தார்.

பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 16.2 ஓவர்களை வீசி 45 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட கிஷண் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 2-வது நாளான இன்று இந்தியா யு-19 தனது பேட்டிங்கை தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here