கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்விரோதம் காரணமாக டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மதன் (20) என்ற வாலிபர் மீது அகிலன் (21), விக்னேஷ் (21), ஆதி (21) ஆகியோர் இரும்பு குழாயால் தாக்கி படுகாயப்படுத்தினர். இதுகுறித்து மதன் வடசேரி போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.