குமரி மாவட்டம் வழியாக நேற்றிரவு உயர்ரக எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளா போதைப்பொருள் தடுப்பு போலீசார் செங்கவிளை பகுதியில் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். கார் தமிழகப் பகுதியான கொல்லங்கோடு நோக்கி சென்றது. கேரளா மற்றும் தமிழக போலீசார் வாகனத்தை துரத்தி பிடித்தபோது, அதில் 200 கிராம் போதைப்பொருள் இருந்தது. செமி (32) என்ற பெண் மற்றும் முகமது சல்பான் (24), ஆஷிக் (20), முகமது ரஷீத் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.