கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சியப்பன் என்ற கைதியை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பேச்சியப்பன் முத்துராஜ் என்ற மற்றொரு கைதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து துணை ஜெயிலர் அளித்த புகாரின் பேரில், நேசமணி நகர் போலீசார் 13 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.