திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (55) என்பவர், தனது மகன் அஜின்குமார் வீட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி அஸ்வினி மற்றும் அவரது சகோதரி ஜெனிமோள் (32) ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஸ்வினி மற்றும் ஜெனிமோள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.