உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் மாணவ மாணவியர் ஒரு மணி நேரம் 10 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் விளையாடி சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் குமரி களரி கலைக்களஞ்சியம் நிறுவனத்திற்கு முதல் பரிசும், நாகர்கோவில் சலீம் ஆசான் மற்றும் ஆசாரிபள்ளம் மின்னல் சந்திரன் ஆசான் ஆகியோருக்கு முறையே 2ம் மற்றும் 3ம் பரிசுகளும், மேலும் பலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.