பைங்குளம் அரசு முழு நேர நூலக வாசகர் வட்ட கூட்டம் வாசகர் வட்ட தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நூலகர் துளசி முன்னிலை வகித்தார். இதில் பேராசிரியர் சஜீவ் உள்ளிட்ட வாசகர் வட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், நூலக வார விழாவை சிறப்பாக நடத்துவது, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரை சிறப்பு விருந்தினராக அழைப்பது, மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது மற்றும் நூலக கண்காட்சி நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.