தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த அஜின் (33) என்ற தொழிலாளிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பிரச்சனைக்குரிய பகுதியில் உள்ள பாறையை அஜின் தந்தை அசோகன் (55), சகோதரர்கள் அனி (35), அஜித் (29) ஆகியோர் உடைத்துள்ளனர். இதை அஜின் தட்டிக் கேட்டபோது, அனைவரும் ஒன்று சேர்ந்து அஜின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.