குமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நகர, பகுதி, ஒன்றிய புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்குதல், நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் தொகுதிகளில் தலைமை சுட்டிக்காட்டும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.