குளச்சல் துறைமுகத்தில் மீனவர்களுக்காக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய ஓய்வறை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரின்ஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார். காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.