மார்த்தாண்டத்தில் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை இருந்தும், அதிவேகத்தால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேம்பாலத்தின் இருபுறங்களிலும் நிரந்தர பேரிகார்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரியும் வகையில் இந்த அமைப்பு செய்யப்பட்டுள்ளது.