பெங்களூரு: வாகன ஓட்டிகளிடம் ரூ.106 கோடி அபராதம் வசூல்

0
13

 பெங்​களூரு​வில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்​து​வரும் நிலை​யில், போக்​கு​வரத்து விதி​முறை மீறல்களும் அதி​கரித்து வரு​கின்​றன. போக்​கு​வரத்து போலீ​ஸார் சாலைகளில் நின்​று, அபராதத்தை வசூலிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்​டம்​பர் 12-ம் தேதிக்​குள் அபராதத்தை செலுத்​தி​னால் 50% தள்​ளு​படி என போலீ​ஸார் அறி​வித்​த‌னர்.

இதையடுத்து வாகன ஓட்​டிகள் தாமாக முன்​வந்து ஆன்​லைன் மூல​மாக அபராதத்தை செலுத்​து​வ​தில் ஆர்​வம் காட்​டினர். அதன்​படி செப்​டம்​பர் 12-ம் தேதி வரை 37 லட்​சத்து 86 ஆயிரத்து 173 போக்​கு​வரத்து விதி​மீறல் வழக்​கு​கள் தொடர்​பாக ரூ.106 கோடி அபராத​மாக செலுத்​தினர். இறுதி நாளான செப்​டம்​பர் 12-ம் தேதி மட்​டும் ரூ.25 கோடி அபராதம் வசூலாகி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here