ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

0
12

ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ அதி​காரி​கள் தற்​காலிக​மாக பணி​யமர்த்தி வரு​கின்​றனர்.

இந்த சுமை தூக்​கும் நபர்​கள் சிக்​கலான மலைப்​பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்​களுக்கு உதவி​யாக இருப்​பர். ராணுவ வீரர்களுக்​குத் தேவை​யான பொருட்​களை மலைப்​பகு​தி​கள் உள்​ளிட்ட இடங்​களுக்கு சுமந்து சென்று உதவி செய்​வர்.

இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச் மாவட்​டம் மண்டி பகு​தி​யில் ராணுவத்​துக்​குச் சொந்​த​மான ஆயுதங்​களை கடத்​தி​ய​தாக 3 சுமை தூக்​கும் நபர்​களை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து 3 ஏகே-47 ரக துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர். 2 வாரங்​களுக்கு முன்பு இது​போன்று 4 ஏகே-47 ரக துப்​பாக்​கி​கள் சுமை தூக்​கும் நபர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்​டிருந்​தது. அஸா​மா​பாத்​தைச் சேர்ந்த தாரிக் ஷேக், சேம்​பர் பகு​தி​யைச் சேர்ந்த ரியாஸ் அகமது, முகமது ஷபி ஆகியோர் கைதானவர்​கள்.

இதுகுறித்து போலீஸ் ஐஜி (ஜம்மு மண்​டலம்) பீம்​சென் துட்டி கூறும்​போது, “ஆயுதங்​களைக் கடத்​தி​ய​தாக சுமை தூக்​கும் நபர்​களை கைது செய்​துள்​ளோம். அவர்​களிட​மிருந்து இது​வரை 7 ஏகே-47 ரக துப்​பாக்​கி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்​டுப் பகு​தி​யில் இந்​தக் கடத்​தல் சம்​பவம் நடந்​துள்​ளது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here